Tuesday, 31 December 2013

திருட சென்ற வீட்டில் "சிக்கன்' சமைத்து சாப்பிட்ட திருடர்கள்

 

நாகப்பட்டினம்: நாகையில், வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த நகைகளைத் திருடிய மர்ம நபர்கள், பின், அதே வீட்டில், அசைவ உணவு சமைத்து சாப்பிட்டுச் சென்றுள்ளனர். நாகை, லத்தீப் தெருவைச் சேர்ந்தவர் பரிதாபேகம், 62. இவர் கணவர், செய்யது முகையதீன், சில ஆண்டுகளுக்கு முன், இறந்து விட்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள்; திருமணமாகி, வெளிநாட்டில் உள்ளனர். தற்போது, பரிதா பேகம், வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த, 23ம் தேதி, நாகூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற பரிதா பேகம், நேற்று முன்தினம், வீடு திரும்பினார். அப்போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு, அதிர்ச்சி அடைந்தார். வீட்டில், எட்டு பீரோக்களில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவை, திருடு போயிருந்தன. மேலும், திருடர்கள், அங்கு குளிர்சாதன பெட்டியில் இருந்த சிக்கன், முட்டை, சேமியா ஆகியவற்றை எடுத்து, சமைத்து, சாப்பிட்டு, சாவகாசமாக சென்றுள்ளனர்.
திருட்டு குறித்து, பரிதாபேகம், கொடுத்த புகாரை அடுத்து, நாகை டவுன் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment