Tuesday, 24 December 2013

இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன வீரர்கள்


லடாக்:இந்திய எல்லையில், சில நாட்களாக அடங்கியிருந்த, சீனாவின் வாலாட்டம், மீண்டும் துவங்கியுள்ளது. கடந்த வாரம், இந்திய எல்லைக்குள், சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்து, இந்திய வீரர்களுடன், கோபத்துடன் வாக்குவாதம் செய்து சென்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம், 50க்கும் மேற்பட்ட சீன வீரர்கள், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர். எல்லை கட்டுப்பாட்டை கடந்து, 19 கி.மீ., தூரம் வரை முன்னேறிய அவர்கள், தேப்சாங் பகுதியில், தற்காலிக முகாம் அமைத்தனர். இது பற்றி பிரச்னை எழுந்ததும், இரு நாடுகளுக்கும் இடையே, கடும் மோதல் எழுந்தது. 21 நாட்களுக்கு பின், இறுக்கமான சூழ்நிலை முடிவுக்கு வந்தது. பின், சில பிரச்னைகள் அவ்வப்போது தலை தூக்கின. இந்திய எல்லையையொட்டி ஆடு மேய்ப்பவர்கள் சிலர், தப்பித் தவறி, சீன பகுதிக்குள் சென்று விட்டால், சீன படையினர், அவர்களை பிடித்து, தங்கள் பிடியில் வைத்து இருந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், சீனாவின் செப்சி பகுதியில் இருந்து, 15க்கும் மேற்பட்ட சீன வீரர்கள், லடாக்கில் செம்மூரில் உள்ள, இந்திய படைகள் நிலை கொண்டுள்ள இடத்தில், எல்லை கட்டுபாட்டு கோட்டை கடந்து வந்தனர். நம் வீரர்களுடன், நேருக்கு நேர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திரும்பி சென்றனர்.பின் இந்த சம்பவம் குறித்து, இரு தரப்பு வீரர்கள் பங்கேற்ற கொடி சந்திப்பின் போது, விவாதித்தனர்.

No comments:

Post a Comment