Friday, 27 December 2013

ராஜஸ்தானில் கண்கள் விரயம்: விசாரணைக்கு உத்தரவு


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலதி்தில் தானமாக பெற்ற கண்களை உரிய நேரத்தில் பொருத்தாமல் வி்ட்டு விட்டதால் நூற்றுக்கணக்கான கண்கள் வீணடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
:நாட்டில் பல கோடி மக்கள் முழுமையாக பார்வையற்று, பகுதி பார்வையிழந்து கஷ்டப்படும் சூழ்நிலை ஒருபுறம் இருக்கையில் கண்களை தானமாக பெறுவதில் பல்வேறு பிரச்னைகள் சந்திக்க வேண்டியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் தானமாக பெற்ற கண்களை முறையாக பயன்படுத்தாததால் அவைகள் வீணடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வீணடிக்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விஜேந்திர ராஜ் மேத்தா என்பவர் ஜோத்பூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்ட கண்கள் குறித்து தகவல்களை கேட்டு விண்ணப்பித்தார்.
மேத்தாவி்ன் கேள்விக்கு பதில் அளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் கடந்த 1996-ம்ஆண்டு முதல் இது வரையில் சுமார் ஆயிரத்து 805 கண்கள் தானமாக பெற்றிருப்பதாகவும், இதில் ஆயிரத்து 63 கண்கள் மற்றவர்களுக்கு பொருத்தப்பட்டு விட்டது எனவும் மீதமுள்ள 702 கண்கள் மட்டுமே பொருத்தப்பட வில்லை என விளக்கம் அளித்திருந்தது.
மேலும் கல்லூரி துணை முதல்வர் கூறுகையில் 2006 முதல் 2012 வரையில் தானமாக பெறப்பட்ட கண்களில் பெரும்பாலும் பொருத்தப்பட்டு விட்டதாகவும், பொருத்த இயலாத வகை மற்றும் தொற்று நோய் காரணம் போன்ற பல்வேறு பிரச்னைகளால் கண்களை பயன்படுத்த முடியவில்லை என கூறினார்
இப்பிரச்னை குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேந்திர ரத்தோர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள ஏழு கண் வங்கிகளில் ஆய்வு நடத்தி ஒரு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment