Tuesday, 24 December 2013

அறுவை சிகிச்சையின்போது தாயின் கருப்பைக்குள் கத்தரிக்கோல்களை மறந்து வைத்த டாக்டர்

அறுவை சிகிச்சையின்போது தாயின் கருப்பைக்குள் கத்தரிக்கோல்களை மறந்து வைத்த டாக்டர்
பிரான்சின் வடக்கு பிராந்தியமான நார்மண்டியில் வசித்து வந்த ஒரு பெண் கடந்த மாதம் பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. அதன்பின்னர் வீட்டிற்குச் சென்ற அந்தப் பெண்ணுக்கு அடிக்கடி வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது.

சாதாரண வலிதான் என்று மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். ஆனால், வலி அதிகமானதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்குச் சென்று ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்தார். அப்போது அவரது கருப்பையில், டாக்டர்கள் பயன்படுத்தும் 2 கத்தரிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த வாரம் அவருக்கு மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்து, கருப்பையில் உள்ள கத்தரிகள் அகற்றப்பட்டன. அறுவை சிகிச்சை கருவிகளை 6 வாரம் சுமந்து அவஸ்தைப்பட்ட அந்த பெண்ணின் உடல்நிலை தேறி வருகிறது. 

அறுவை சிகிச்சையின்போது தவறுதலாக கத்தரிகளை மறந்து வயிற்றுக்குள் வைத்த டாக்டர் தனது தவறுக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டுள்ளார். எனினும், பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது கணவரும் இதுதொடர்பாக புகார் அளிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment