Thursday, 26 December 2013

கழிவறை இல்லாததால் கணவனை புறக்கணித்த மனைவி




இந்தூர்: இந்தூர் அருகே உள்ள, முண்ட்லானா என்ற கிராமத்தில் வசிக்கும், தேவ்கரண் என்பவருக்கு, ஏழு ஆண்டுகளுக்கு முன், சவிதா என்ற பெண், திருமணம் செய்து வைக்கப்பட்டார். புகுந்த வீட்டிற்குச் சென்ற, அந்தப் பெண்ணுக்கு, அந்த வீட்டில் கழிவறை இல்லாததும், திறந்த வெளியில் தான், பெண்களும், இயற்கை உபாதையை கழிக்க வேண்டும் என கூறப்பட்டதும், அதிர்ச்சி அடைந்தார். எப்படியோ சமாளித்து, மூன்று ஆண்டுகளில், இரண்டு குழந்தைகளைப் பெற்ற அப்பெண், ஒரு நாள், கணவனிடம் கோபித்து, தன் தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் கழிவறை கட்டினால் தான், திரும்பி வருவேன் என, அவர் கூறி, அப்படியே, நான்காண்டுகள் இருந்தும் விட்டார். குழந்தைகளை பராமரிக்க, கணவன் பணம் கொடுக்க வேண்டும் என, அந்தப் பெண், வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை, நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த போது தான், இருவருக்கும் இடையே, கழிவறை தான் பிரச்னை என்பதை, நீதிபதிகள் அறிந்தனர்.
அதையடுத்து, கணவனிடம் பேசிய நீதிபதி, கழிவறை கட்டித் தர வேண்டும் என, உத்தரவிட்டார். அதை கணவர் ஏற்றுக் கொண்டார். கழிவறை கட்டித் தந்தால், கணவன் வீட்டில் வாழத் தயார் என, அப்பெண்ணும் அறிவித்தார். இதையடுத்து, வழக்கை வாபஸ் பெற்ற அந்தப் பெண், நான்காண்டுகளுக்குப் பிறகு, தன் கணவனுடன், வாழத் துவங்கி உள்ளார்.

No comments:

Post a Comment