Wednesday, 25 December 2013

உகாண்டா நாடாளுமன்றத்தில் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு அமெரிக்கா வருத்தம்


உகாண்டா நாடாளுமன்றத்தில் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக கடந்த வாரம் மசோதா நிறைவேற்றப்பட்டது.இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், "உகாண்டா நாடாளுமன்றத்தில் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது. உலக மக்கள் அனைவரும் சுதந்திரமாகவும், சமமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. மேலும் ஒருவரை நேசிக்கும் காரணத்திற்காக அவர் மீது தாக்குதலில் ஈடுபடவோ அல்லது அவரை வேறுபடுத்தியோ பார்க்கக் கூடாது.இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் ஓரினச் சேர்க்கையால் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது' என்று சாகி தெரிவித்தார்.

No comments:

Post a Comment