Tuesday, 31 December 2013

வாலிபரை அடித்து துவைத்த உத்தர பிரதேச அமைச்சர்



வாரணாசி: உத்தர பிரதேசத்தில், பொது நிகழ்ச்சியில், இளைஞரை, மாநில அமைச்சர், சரமாரியாக அடித்து நொறுக்கினார். சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி., அரசில், அமைச்சராக இருப்பவர், சுரேந்திர படேல். வாரணாசியில் உள்ள அவர் வீட்டில் நேற்று முன்தினம், ஏழை மக்களுக்கு, 10 ஆயிரம் போர்வைகள் வழங்கப்படும் என, அறிவித்திருந்தார். இதை அறிந்த
ஏராளமானோர், அவர் வீட்டை முற்றுகையிட்டனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்த, ஒரு சில
போலீசாரே வந்திருந்தனர். இதனால், அமைச்சர், தானே, கூட்டத்தை ஒழுங்குபடுத்த முயன்றார்.
அப்போது முண்டியடித்த இளைஞர்கள் சிலரை, இவர், அடித்து, துவைத்தார்.
அதற்குப் பிறகு, மேடைக்குச் சென்ற அமைச்சர், போர்வைகளை வழங்கினார்.இந்தக் காட்சிகள் நேற்று, அம்மாநில, 'டிவி'களில் வெளியானது. அதைப் பார்த்ததும், அதிர்ச்சி அடைந்த அமைச்சர், ''நான் யாரையும் அடிக்கவில்லை; கூட்டத்தை ஒழுங்குபடுத்தினேன், என்றார்.
அதன் பிறகு, நான் அடித்தது, என் உறவுக்கார பையன். செல்லமாக, ரெண்டு தட்டு தட்டினேன், அவ்வளவு தான், என்றார். எனினும், அமைச்சரின் ஆவேச காட்சிகள், 'டிவி'யில் தெளிவாக தெரிந்ததால், அவர் கூறியதை யாரும் நம்பவில்லை.

No comments:

Post a Comment