Monday, 23 September 2013

13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை



தும்கூர்: கர்நாடகாவில் 7ம் வகுப்பு படிக்கும் சிறுமி, அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் நடந்துள்ளது.தும்கூர் தாலுகா நந்திஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்வேதா, வயது 13 (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), அங்குள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்குச் செல்வதற்கு முன் கடுமையான வயிற்று வலியால் துடித்தார். அதை பார்த்த பெற்றோர் உடனடியாக தும்கூரிலுள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறி, உடனடியாக மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அழகான ஆண் குழந்தையை ஸ்வேதா பெற்றெடுத்தார். 

இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் டாக்டர்கள் விசாரித்தபோது, தனது மகள் கர்ப்பமாக இருப்பது தெரியாது என்றனர். மயக்கம் தெளிந்த பிறகு, சிறுமியிடம் விசாரித்தபோது, அவரது மாமா நவீன் (23) தான் கர்ப்பத்துக்கு காரணம் என்று கூறியிருக்கிறார்.இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து, பெண்கள் அமைப்பினர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமானவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, நவீனை கைது செய்த போலீசார், அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர்.

No comments:

Post a Comment