Tuesday, 17 September 2013

அமெரிக்க கடற்படையில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள்

அமெரிக்க கடற்படையில் அதிகரித்துக் கொண்டே போகும் பாலியல் அத்துமீறல்கள்

வாஷிங்டன்: அமெரிக்க கடற்படையில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 50 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த மாதம் வரை அமெரிக்க கடற்படையில் பணிபுரிபவர்களில் 1,800 பேர் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாதம் பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் 775 பேர் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பாலியல் அத்துமீறல் புகார்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளன. இது குறித்து கடற்படை உயர் அதிகாரி ஷான் பக் கூறுகையில், பாலியல் அத்துமீறல் புகார்கள் எதிர்பார்த்தது தான். இத்தனை புகார்கள் வந்தது ஒரு வகையில் நல்லது. காரணம் வீரர்கள் துணிச்சலாக வந்து புகார் கொடுத்துள்ளனர் என்றார். 26,000 பேர் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகி இருக்கக்கூடும் என்று பாதுகாப்புத் துறை கணித்துள்ளது. ஆனால் 3,000க்கும் குறைவானவர்களே புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment