கள்ளக்காதலனை கணவர் கொன்றதால் மனைவி தற்கொலை
மதுரவாயல் அருகே கள்ளக்காதலனை கணவர் கொலை செய்து விட்டதால், விரக்தி அடைந்த மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெயிண்டர்
மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், ராஜீவ்காந்தி நகர், ராமதாஸ் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 33). பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி புவனேஷ்வரி (30). இவர்களுக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர்.
சக்திவேலுவுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அவர், அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
கள்ளக்காதல்
இந்நிலையில் மதுரவாயல், நெற்குன்றம், மேட்டுக்குப்பம், அபிராமி நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (24) என்பவருடன் புவனேஷ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மலர்ந்தது. இருவரும் பலமுறை உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சக்திவேல், மனைவி புவனேஷ்வரியை பலமுறை கண்டித்தார். இது சம்மந்தமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனைவியுடன் கோபித்துக்கொண்டு சக்திவேல் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
வெட்டிக்கொலை
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட புவனேஷ்வரி இரவு நேரங்களில் தனது குழந்தைகளை அருகில் உள்ள அவருடைய தாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு கள்ளக்காதலன் சதீசுடன் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 7-ந்தேதி நள்ளிரவில் வீட்டுக்கு வந்த சக்திவேல், படுக்கை அறையில் சதீசும், தனது மனைவியும் அலங்கோலமாக இருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்தார். உடனே வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சதீசை குத்திக்கொலை செய்தார்.
மேலும் தனக்கு துரோகம் செய்த மனைவியும் கொலை செய்ய விரட்டிச் சென்றார். ஆனால் புவனேஷ்வரி அதிர்ஷ்டவசமாக தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மனைவி தற்கொலை
இந்தநிலையில் கள்ளக்காதலனும் இறந்து விட்டார். கணவனும் சிறைக்கு சென்று விட்டதால் புவனேஷ்வரி தனது குழந்தைகளுடன் தாயார் வீட்டில் தங்கி இருந்தார்.
கள்ளக்காதலன் கொலை செய்யப்பட்ட நாள் முதல் மனவேதனையில் இருந்து வந்த புவனேஷ்வரி, நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணை
தூக்கில் தங்கள் மகள் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் புவனேஷ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment