Thursday, 19 September 2013

மது அருந்திய பள்ளி மாணவர்களுக்கு போலீசார் அறிவுரை



சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள உடற்பயிற்சி நிலையத்திற்குள் 3 வாலிபர்கள் ஏறி குதிப்பதை கண்ட பொதுமக்கள் திருவான்மியூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் சென்ற போலீசார் 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் 3 பேரும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் என்பது மது அருந்துவதற்காக உடற்பயிற்சி நிலையத்திற்குள் புகுந்தனர் என்பதும் தெரியவந்தது.
போலீசார் 3 பேரின் பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறினார்கள். மேலும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என மாணவர்களிடம் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment