திருப்பதி: திருப்பதி அருகே, இஸ்லாமிய பல்கலைக்கழகம் கட்டப்படுவதற்கு, பா.ஜ.க,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகம் தொடர்பான விபரங்களை, உடனே தெரியப்படுத்த வேண்டும் என, பா.ஜ., தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பதியில் உள்ள பாதாலு மண்டபத்திற்கு மிக அருகில், இஸ்லாமிய பல்கலை கட்டப்படுகிறது. "ஹீரா பிசினஸ் குரூப்' சார்பில், அதன் தலைவி நவேரா ஷேக் ஹீரா, பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு, படிப்பவர்கள் அனைவரும், வெளியூர் மாணவர்கள். தற்போது, நவேரா, இஸ்லாமிய பல்கலை கட்டும் பணியை துவக்கி உள்ளார். இதற்கு பா.ஜ., மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து, திருப்பதி பா.ஜ.,ஒருங்கிணைப்பாளர் பானுபிரகாஷ் ரெட்டி கூறியதாவது: திருப்பதிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக, உளவு துறை மற்றும் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இச்சூழ்நிலையில், திருப்பதியில், இஸ்லாமிய பல்கலைக்கு அனுமதி அளித்தது, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, மத்திய அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும். பல்கலைக் கழகம் கட்டும் நிலம் யாருடையது, யார் கொடுத்தது, அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள், மாணவர்களின் பாட திட்டம் என்ன? என்ற விவரங்களை உடனடியாக விசாரித்து, தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்
Sunday, 15 September 2013
இஸ்லாமிய பல்கலைக்கழகம் கட்டப்படுவதற்கு, பா.ஜ.க,வினர் கடும் எதிர்ப்பு

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment