நண்பருடன் ஜாலியாக குறும்புத் தனத்துடன் விளையாடிய இளம் பெண் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் கொலராடோ பகுதியை சேர்ந்த பிரமீளா லாலின்(வயது 18) நண்பர் நெரிக் கேலி(வயது 21).
ஓட்டப்பந்தய வீராங்கனையான பிரமீளாவுக்கு, அவர் படித்த பள்ளியில் கடந்த 6ம் திகதி பாராட்டு விழா நடக்க இருந்தது.
இந்நிலையில் நண்பரின் வீட்டுக்கு சென்று ரகசியமாக உள்ளே நுழைந்த பிரமீளா, கேலிக்கு ஷாக் கொடுத்தார்.
சரியான வெளிச்சம் இல்லாததால், பிரமீளாவை கொள்ளையன் என நினைத்த கேலி, துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டார்.
இதில் பிரமீளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதன் பின் பார்த்த போது தான், இறந்தவர் பிரமீளா என தெரியவந்தது.
தற்செயலாக நடந்த சம்பவம் என்பதால், இதுவரை கேலி மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
எனினும் இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
No comments:
Post a Comment