பாகிஸ்தானின் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணும், அவருக்கு உதவிய மேலும் இரு பெண்களும் சுட்டு கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.
இங்கு நீதிமன்றம், காவல்துறைக்கு மதிப்பில்லை. உள்ளூர் பஞ்சாயத்தின் மூலமே, தண்டனை வழங்கப்படுகிறது.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின், ஜவாகி பகுதியைச் சேர்ந்த, சாதியா, 22, திருமணத்திற்குப் பின், கராச்சியில் வசித்து வந்தார்.
திருமணம் முடிந்து இரு ஆண்டுகளுக்குப் பின், கள்ளத் தொடர்பு காரணமாக மற்றொருவருடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
சாதியாவை கடத்திச் சென்றதாக அவரது உறவினர்கள், கராச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து, இருவரையும் தேடிக் கண்டுபிடித்த பொலிஸார், சாதியாவை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே, ஜவாகி பகுதியை சேர்ந்த பஞ்சாயத்தார், சாதியா வீட்டை விட்டு ஓடி போனது குறித்து விசாரித்தனர்.
இந்த குற்றத்துக்காக, சாதியாவையும், அவருடைய அத்தை மற்றும் ஒன்றுவிட்ட சகோதரியையும் சுட்டுக் கொல்ல பஞ்சாயத்து உத்தரவிட்டது.
கடந்த, 13ம் திகதி மூன்று பெண்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றன
No comments:
Post a Comment