Sunday, 15 September 2013

முஸ்லிம் அழகிப் போட்டி


மிஸ் வேர்ல்ட் உலக அழகி போட்டிக்கு போட்டியாக முஸ்லிம் பெண்களுக்கான அழகிப் போட்டி நடைபெறவுள்ளது.
முஸ்லிம் அமைப்புகளின் கடும் எதிர்ப்பு காரணமாக மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டி ஜகார்தாவிலிருந்து பாலி தீவுக்கு மாற்றப்பட்டு நடந்து வருகிறது.
இந்நிலையில் இதற்கு போட்டியாக தற்போது முஸ்லிம் பெண்களுக்கான அழகிப் போட்டி ஒன்று ஜகார்தாவில் வருகிற 18ம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிக்கு முஸ்லிமா வேர்ல்ட் போட்டி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போட்டி நிறுவனரான ஈகா சாந்தி கூறுகையில், மிஸ் வேர்ல்ட் போட்டிக்கு முஸ்லிம் உலகம் தரும் பதிலடி தான் இது.
இதுவும் அழகிப் போட்டி தான், ஆனால் மிஸ் வேர்ல்டுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
இது தன்னம்பிக்கை தரும் போட்டியாகும். ரோல் மாடலாக திகழ்வதற்கான போட்டியாகும்.
இன்றைய நவீன உலகில் மதக் கோட்பாடுகளை எப்படிக் கடைப்படிப்பது, சமச்சீரை எப்படி கடைப்பிடிப்பது என்பதைச் சொல்லித் தரும் போட்டியாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்காக அழகிகள் தெரிவு ஒன்லைன் மூலம் நடந்தது. 500 பேர் கலந்து கொண்டதில் 20 பேர் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனராம்.
குரான் வாசகங்களைகப் படிப்பது, இஸ்லாமியக் கதைகள் ஒப்புவித்தல், இஸ்லாமிய மத உடைகளை அணிவதில் கடைப்பிடிக்கப்படும் மரபுகள் உள்ளிட்டவை குறித்து இந்த அழகிப் போட்டியில் கேள்விகள் கேட்கப்பட்டு இறுதிச் சுற்றுக்குப் பெண்கள் தெரிவாகியுள்ளனராம்.
இறுதிச் சுற்றில் இடம் பெற்றுள்ள பெண்கள் இந்தோனேசியா, நைஜீரியா, வங்கதேசம், புரூனே, மலேசியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

No comments:

Post a Comment