Sunday, 15 September 2013

காதல், பாலியல் கொலை அதிகரிப்பு



புதுடெல்லி: பழிக்கு பழி, சொத்து தகராறுக்காக கொலை செய்வதெல்லாம் பழசாகி விட்டது; சமீப காலமாக, காதல், பாலியல் குற்ற கொலைகள் தான் இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்று மத்திய அரசு சர்வேயில் தெரியவந்துள்ளது.  மத்திய அரசின் தேசிய குற்றப் பதிவேடு ஆணையம் 2012ல் நடந்த குற்ற கொலைகள் தொடர்பாக சர்வே எடுத்தது. பல மாநிலங்களிலும் எந்த காரணத்துக்காக கொலைகள் நடந்துள்ளன என்று சேகரித்தபோது, அந்த தகவல்கள் அதிர்ச்சி தரும் வகையில்  அமைந்திருந்தன. இதுவரை பொதுவாக பழிக்கு பழி, சொத்து தகராறு ஆகிய காரணங்களுக்கு தான் கொலைகள் நடந்துள்ளன.  ஆனால், கடந்தாண்டு குற்றங்களில் பெரும்பாலும், பல மாநிலங்களிலும் காதல், பாலியல் குற்றங்களுக்காக கொலை நடந்துள்ளது என்று தெரியவந்தது. 
சர்வேயில் கிடைத்த சில அதிர்ச்சி தரும் தகவல்கள்: 
*தனிப்பட்ட விரோதம் முதல் பாலியல் குற்றங்கள் வரை பல்வேறு காரணங்களுக்காக மொத்தம் 34,434 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 
*பழிக்கு பழி காரணமாக கொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3877.
*சொத்து தகராறு காரணமாக நடந்த கொலைகள் 3169.
*காதல், பாலியல் குற்றங்கள் காரணமாக 2549 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 
*ஆந்திராவில் 445, உபியில் 325, மகாராஷ்டிராவில் 254, பஞ்சாபில் 83, காஷ்மீரில் 11, இமாச்சல் பிரதேசத்தில் 10, நாகலாந்தில் 2 ஆகிய கொலைகள் நடந்துள்ளது காதல், பாலியல் குற்றங்களில். 
*இதில், தமிழ்நாட்டில் 291, குஜராத்தில் 116, டெல்லியில் 56 கொலைகள் நடந்துள்ளன. தனிப்பட்ட விரோதம், சொத்து தகராறு கொலைகளை  விட இந்த மாநிலங்களில் பாலியல் குற்ற கொலைகள் அதிகரித்துள்ளன.
*அரியானாவில் கவுரவ கொலைகள் என்று காதலர்களை கொல்லும் கொடூரம் நடக்கிறது. இந்த மாநிலத்தில் 50 பேர் இப்படி கொல்லப்பட்டுள்ளனர். 
*மற்ற மாநிலங்களில் இந்த காரணத்துக்காக கொலைகள் நடக்கவில்லை. 
*அசாமில் நடந்த கொலைகளில் 56 சதவீதம், சாதி மோதல் காரணமாக நடந்துள்ளன. மொத்தம் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 
*ஒடிசா, மேற்கு வங்கத்தில்  முறையே 415, 252 பேர் வரதட்சணைக்காக கொல்லப்பட்டுள்ளனர். 
*ஆந்திராவில் 167, மகாராஷ்டிராவில் 130, பீகாரில் 102 பேர் வரதட்சணைக்காக கெலை செய்யபப்பட்டுள்ளனர். 
*வரதட்சணை கொலைகள், 2001ல் 968 பேர், 2011 ல் 1339 பேர், 2012ல் 1458 பேர்  கொலை என்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
*தென் மாநிலங்களில் பேய் , பிசாசு, மூட நம்பிக்கையால் கொலைகள் நடப்பது வெகு குறைவு. 

No comments:

Post a Comment