காரைக்குடி: காரைக்குடி சிக்ரியில், சோலார் பேட்டரிகள், உலோக அரிமானங்களை தடுக்கும் முறைகள், மின் முலாம் பூச்சு முறைகள், மின் வேதியியல் ஆற்றல், மின் கரிம வேதியியல், மின் கனிம வேதியியல், மின்தகடு மற்றும் மின் வினையூக்கியியல் சம்பந்தமான ஆய்வு கண்டுபிடிப்புகள் உள்ளன. மேலும் அதி நவீன ஆராய்ச்சி உபகரணங்களும் உள்ளன.
அறிவியல் தொழிலக ஆய்வு குழுமம் (சி.எஸ்.ஐ.ஆர்.,) 71வது நிறுவன நாளை முன்னிட்டு, காரைக்குடி சிக்ரி சம்பந்தான அனைத்து கண்டுபிடிப்புகளும் மாணவர்கள், பொதுமக்கள் பார்வைக்கு, வரும் 27ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை வைக்கப்படுகிறது. அறிவியல் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 04565 241 522, 241 246 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், என இயக்குனர் விஜயமோகனன் கே.பிள்ளை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment