சேலம் மாவட்டம், ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் புது பஸ் ஸ்டாண்ட்களில், மூன்று நவீன கட்டண கழிப்பறைகள் உள்ளன. அவற்றை, "டெண்டர்' எடுத்த குத்தகைதாரர், மூன்று கட்டண கழிப்பறைகளிலும், "வீடியோ கேமரா' பொருத்தினார். மேலும், கேமரா பொருத்த, நகராட்சி நிர்வாகத்திடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை.
பெண்கள் கழிப்பறைக்கு உள்ளே செல்லும் பாதையில், சுழலும் வகையில், வீடியோ கேமரா இருந்ததால், சதி வேலை நடக்கலாம் என, பெண்கள் மத்தியில், அச்சம் ஏற்பட்டது.
பெண்கள் கழிப்பறைக்கு உள்ளே செல்லும் பாதையில், சுழலும் வகையில், வீடியோ கேமரா இருந்ததால், சதி வேலை நடக்கலாம் என, பெண்கள் மத்தியில், அச்சம் ஏற்பட்டது.
இது குறித்து, நேற்று, படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கலெக்டர் மகரபூஷணம், நகராட்சி கழிப்பறையில் உள்ள வீடியோ கேமரா குறித்து, ஆய்வு செய்து, பறிமுதல் செய்யும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, வீடியோ கேமராக்களை அதிகாரிகள் அகற்றினர்.
பின், குத்தகைதாரர், பணியாளர்களிடம் விசாரணை செய்தனர். மேலும், வீடியோ கேமரா பதிவு காட்சி விவரங்களை, கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்தனர். பின், மூன்று வீடியோ கேமரா, ரிசீவர், ஒயர்கள் உள்ளிட்ட சாதனங்களை, நகராட்சி அலுவலர்கள், போலீசார் முன்னிலையில் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து, ஆத்தூர் போலீசில், புகார் செய்யப்பட்டது. போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகராட்சி கமிஷனர் ஜெகதீஸ்வரி கூறுகையில், நகராட்சி கட்டண கழிப்பறையில், காசு வாங்கும் இடத்தில், வீடியோ கேமரா பொருத்தப்பட்டிருந்தது. நகராட்சி அனுமதி பெறாததால், மூன்று வீடியோ கேமராவை பறிமுதல் செய்துள்ளோம். குத்தகைதாரருக்கு, "நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. ஆத்தூர் போலீசில் புகார் செய்துள்ளோம். துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.
No comments:
Post a Comment