Saturday, 7 September 2013

300 பெண்களை திருமணம் செய்தவன்



ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில், 300 பெண்களை திருமணம் செய்தவன், போலீசில் சிக்கியுள்ளான்.
ராஜ்நாத்கான் மாவட்டத்தைச் சேர்ந்தவன் விஜய் கஜபியே, 47. இவன், பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாக, மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் சென்றன. கலெக்டர் உத்தரவின்படி, போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மோசடி நபர், 300 திருமணம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவனை போலீசார் கைது செய்தனர்.

இவன் குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சத்தீஸ்கர் மாநிலத்தில், கலப்புத் திருமணம் செய்வோருக்கு, உதவித் தொகையாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதனால், வேறு ஜாதியைச் சேர்ந்த பெண்களை பதிவுத் திருமணம் செய்யும் விஜய், அரசின் உதவித் தொகையைப் பெற்றவுடன், அதில் பாதியை, திருமணம் செய்த பெண்ணுக்கும், மீதித் தொகையை, தனக்கு உதவிய அரசு ஊழியர்களுக்கும் கொடுத்து விட்டு, சான்றிதழை கிழித்து எறிந்துவிடுவான். பின், வேறு மாவட்டத்திற்கு சென்று, மீண்டும் வேறு பெண்ணைத் திருமணம் செய்வான். இப்படியே, 300 பெண்களை மணந்து, பணத்தை சுருட்டியுள்ளான். அதற்குத் தேவையான, பெயர் மற்றும் இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை, போலியாக தயாரித்து மோசடி செய்வான். இப்படியே, 300க்கும் மேற்பட்ட பெண்களை இவன் திருமணம் செய்துள்ளான். இவன் தங்கியிருந்த இடத்திலிருந்து, போலி ரப்பர் ஸ்டாம்புகள், லெட்டர் பேட், சான்றிதழ்கள் ஆகியவை 
கைப்பற்றப்பட்டன.

No comments:

Post a Comment