பேயை விரட்ட குழிக்குள் புதைக்கப்பட்ட மந்திரவாதி மூச்சு திணறி இறந்தார்.
இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள பிலான்வாட் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா பண்மாரா. இவர் பள்ளிக்கூட ஆசிரியை ஆக பணிபுரிகிறார்.
இவரது வீட்டுக்குள் பேய் புகுந்து விட்டதாக கருதினார். எனவே அதை விரட்ட மாஸி காஸ்ட்ரோ (34) என்ற மந்திரவாதியை அணுகினார்.
அவரது வீட்டுக்கு வந்த அவர் ஒரு பூனையை கொன்று அதன் ரத்தத்தின் மூலம் பூஜை செய்தார். பின்னர் அந்த பேயை வீட்டை விட்டு விரட்ட தான் ஒரு நூதன பூஜை செய்ய வேண்டும் என்றார்.
அதற்காக தன்னை ஒரு குழிக்குள் உட்கார வைத்து மண்ணை போட்டு தன்னை மூடும் படியும், அங்கிருந்து மந்திரம் மூலம் பேயை விரட்டுவேன். சிறிது நேரம் கழித்து சைகை கொடுத்ததும் மண்ணை தோண்டி என்னை வெளியே தூக்குங்கள் என்றார். அதன்படி அவரை குழியில் உட்கார வைத்து மண்ணால் மூடினார்கள்.
ஆனால் நீண்ட நேரமாயும் மந்திரவாதி மாஸி காஸ்ட்ரோவிடம் இருந்து சைகை சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பொது மக்கள் 3 மணி நேரம் கழித்து மண்ணை தோண்டி அவரை வெளியே தூக்கினர்.
ஆனால் அவர் மயங்கிய நிலையில் இருந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இலங்கையில் வாழும் புத்த மதத்தினரிடம் ஜோதிடம் மற்றும் மாந்திரீகத்தின் மீது அதிக நம்பிக்கை உள்ளது. ஆவி மற்றும் பில்லி சூனியம் போன்றவற்றை விரட்ட மந்திரவாதிகளின் உதவியை நாடுகின்றனர். இதனால் அங்கு இது போன்ற மந்திரவாதிகள் அதிக அளவில் உள்ளனர்.
No comments:
Post a Comment