புவனேஸ்வர்: உறவு மாறி திருமணம் செய்து கொண்ட தங்கையை கொல்ல, சதி திட்டம் தீட்டிய அண்ணன் அதே கூலிப்படையால் கொல்லப்பட்டார்.ஒடிசா தலைநகர் புவனைஸ்வரிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ளது அங்குள் என்ற ஊர். இங்கு டூவீலர் பழுது பார்க்கும் கடையை நடத்தி வருபவர் சமர்தாஸ் (வயது 30). இவரது தங்கை நமீதா. நமீதாவிற்கும் அதே பகுதியை சார்ந்த அபிமன்யு (வயது 41 ) என்பவரும் காதலித்தனர். இதை அறிந்த சமர்தாஸ், உனது காதலன் உனக்கு அண்ணன் முறை வேண்டும். எனவே உன் காதலை துண்டித்துக் கொள் என கூறினார். இதை காதில் வாங்கி கொள்ளாத நமீதா தன் காதலனையே திருமணம் செய்து கொண்டார்.இதனால் கொதிப்படைந்த சமர்தாஸ் தங்கையை கொல்ல திட்டம் தீட்டினார். கூலிப்படையை அணுகினார்.
நமீதாவை கொல்ல 3 லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டது. ஆனால் நமிதாவை கூலிப்படையால் கொல்ல முடியவில்லை. ஒவ்வொரு முறையும் எப்படியோ அதிஷ்டவசமாக அவர் தப்பி வந்தார். இதனால் கடுப்பான கூலிப்படையினர் தங்கள் திட்டத்தை மாற்றினர். சமர்தாஸை போனில் அழைத்த கூலிப்படையினர், உங்கள் தங்கையை திட்டமிட்டபடி கொன்று விட்டோம். பணம் கொண்டு வாருங்கள் என்றனர். இதையடுத்து, சமர்தாஸ் பணத்தை எடுத்து கொண்டு கூலிப்படையினர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றார். அங்கு திடீரென சமர்தாஸை கத்தியால் வெட்டிய கும்பல், பணத்தை பறித்து கொண்டு ஓடியது. படுகாயம் அடைந்த சமர்தாஸ் இறந்தார்.
No comments:
Post a Comment