சீனாவை சேர்ந்த ஒரு ஆஸ்பத்திரி நிர்வாகம், மருத்துவ ஆராய்ச்சிக்கு கன்னிப்பெண்களின் ரத்தத்தை கேட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. பீகிங் பல்கலைக்கழக புற்றுநோய் ஆஸ்பத்திரிதான் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. பாலியல் உறவு மூலம் எச்.பி.வி. என்ற வைரஸ் பரவுகிறதாம். அதுபற்றிய ஆராய்ச்சிக்காக, 18 வயது முதல் 24 வயது வரையிலான 100 கன்னிப்பெண்களின் ரத்தம் தேவை என்று அந்த ஆஸ்பத்திரி கேட்டுள்ளது.
அதற்கு இணையதளத்தில் ஏராளமான கண்டன கணைகள் குவிந்துள்ளன. ‘கன்னிப்பெண்களின் ரத்தம்தான் தேவையா? ஆண் பிரம்மச்சாரிகளின் ரத்தம் தேவை இல்லையா? என்ன விஞ்ஞானம் இது?‘ என்று பலர் கிண்டலாக கேட்டுள்ளனர். இப்படி கன்னிப்பெண்களின் ரத்தத்தை கேட்டதன்மூலம், பெண்களை இழிவுபடுத்தி விட்டதாகவும் பலர் கொதித்து எழுந்துள்ளனர்.
ஆனால், இந்த கோரிக்கையை ஆஸ்பத்திரி நிர்வாகம் நியாயப்படுத்தி உள்ளது. ‘கன்னிப்பெண்களின் ரத்தத்தில் எச்.பி.வி. தாக்குவதற்கு வாய்ப்பு குறைவு. அத்துடன், கன்னிப்பெண்களின் ரத்தத்தை கேட்பது சர்வதேச நடைமுறைதான். எனவேதான், இந்த கோரிக்கையை விடுத்தோம்‘ என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment