Monday, 30 September 2013

பிறப்புறுப்பை தைத்து கொடுமைப்படுத்திய கணவன்

புவனேஸ்வர்: மனைவிக்கு மொட்டை அடித்து, அவரின் வயிற்றில் டியூப்லைட்டால் குத்தி, பிறப்புறுப்பை தைத்து கொடுமைப்படுத்திய கணவன் கைது செய்யப்பட்டான்.
ஒடிசா மாநிலம், புவனேஸ்வரைச் சேர்ந்தவன், ரஞ்சன் பாண்டா, 32. இவனுக்கும், இவனின், 28 வயது மனைவிக்கும், 2005ல் திருமணம் நடந்தது. தற்போது, ஏழு வயதில் மகன் உள்ளான். திருமணத்தின் போது, போதுமான வரதட்சணை கொடுக்காததாலும், வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக, சந்தேகித்ததாலும், மனைவியை அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்தான் பாண்டா. கொடுமையை பொறுக்க முடியாத, பாண்டாவின் மனைவி, 2012ம் ஆண்டில், மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்த போது, 'இனிமேல் கொடுமைப்படுத்த மாட்டேன்' என, வாக்குறுதி அளித்து, மனைவியை தன்னுடன் அழைத்து வந்தான் பாண்டா. அதன்பின், அவனின் கொடுமை மேலும் அதிகரித்தது. கடந்த, 24ம் தேதி இரவு, மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்த பாண்டா, அவர் சுயநினைவை இழந்ததும், அவரின் தலையை மொட்டை அடித்தான். பின், பழுக்கக் காய்ச்சிய ஆணியால், மனைவியின் கன்னத்தில் இருந்த மச்சத்தை அகற்றினான்; உடைந்த டியூப்லைட்டால், வயிற்றில் குத்தியதோடு, பிறப்புறுப்பையும் நூல் மூலம் தைத்தான். இதன்பின், அப்படியே சாகட்டும் என, விட்டு விட்டான்.
இந்தத் தகவலை எப்படியோ அறிந்த, பாண்டாவின் குடும்பத்தினர், அந்தப் பெண்ணை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்கு சேர்த்தவுடன், போலீசுக்கு பயந்து ஓடிவிட்டனர். மருத்துவமனை நிர்வாகத்தினர், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரருக்கு தகவல் கொடுத்து, அவர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, பாண்டா கைது செய்யப்பட்டுள்ளான். கொடுமைக்கு ஆளான பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments:

Post a Comment