Friday, 20 September 2013

"மாஜி' ராணுவ தளபதி சிங் ஏற்படுத்திய ரகசிய பிரிவு:




புதுடில்லி: முன்னாள் ராணுவ தளபதி, வி.கே.சிங்கால் ஏற்படுத்தப்பட்ட, ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவு, முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியான தகவலால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட, அரசு திட்டமிட்டுள்ளது. வி.கே.சிங், ராணுவ தளபதியாக இருந்தபோது, ராணுவத்தில், தொழில்நுட்ப பணிகள் டிவிஷன் என்ற தனிப் பிரிவை ஏற்படுத்தினார். இந்த பிரிவில் உள்ளவர்கள், தொழில்நுட்ப ரீதியிலான ரகசிய புலனாய்வு விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், பத்திரிகை ஒன்றில், தனிப்பிரிவு பற்றிய, சர்ச்சைக்குரிய செய்தி, நேற்று வெளியாகி இருந்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: வி.கே.சிங்கால் அமைக்கப்பட்ட, பிரிவு மூத்த ராணுவ அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை, சட்ட விரோதமாக ஒட்டு கேட்டது. டி.எஸ்.டி.,க்கு ஒதுக்கப்பட்ட நிதி, காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான, தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சியில், சீர்குலைவை ஏற்படுத்துவதற்காக, அங்கு உள்ள அமைச்சர் ஒருவருக்கு கொடுக்கப்பட்டது. ராணுவம் நியமித்த விசாரணை வாரியத்தின் அறிக்கையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்து, விசாரணை நடத்துவதற்கும், ராணுவ அமைச்சகத்துக்கு, விசாரணை வாரியம் பரிந்துரைத்துள்ளது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment