தாங்கள் வாழும் காலத்தில் சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய கத்தோலிக்க கிருஸ்துவ மதகுருமார்களுக்கு இத்தாலியில் உள்ள வாடிகன் அரண்மனை 'புனிதர்' அல்லது 'செயின்ட்' எனப்படும் உயரிய பட்டங்களை வழங்கி வந்துள்ளது.
ஆட்சி மாற்றம், நோயிலிருந்து விடுதலை, ஏழ்மை மீட்சி போன்ற வியத்தகு அற்புதங்களில் 2 அற்புதங்களை புரிந்த முன்னாள் போப்புகளில் சிலருக்கு இவ்வகையில் புனிதர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வகையில், 1958ம் ஆண்டிலிருந்து 1963 வரை போப்பாக இருந்து மரணமடைந்த போப் 23வது ஜான் மற்றும் 1978ம் ஆண்டிலிருந்து 2005 வரை போப் பதவியை 27 ஆண்டுகள் வகித்த போப் இரண்டாம் ஜான்பால் ஆகியோருக்கு ஒரே நேரத்தில் புனிதர் பட்டம் வழங்கப்படும் என தற்போதைய போப்பான பிரான்சிஸ் நேற்று அறிவித்தார்.
No comments:
Post a Comment