Saturday, 21 September 2013

மாணவிகள் அருகில் உட்கார மறுத்த மாணவன் கன்னத்தில், "பளார்' அறை விட்ட ஆசிரியர்



கன்னியாகுமரி மாவட்டம் சரல்விளையை சேர்ந்தவர் வக்கீல் ஜெயக்குமார். இவரது மகன் ஆன்சிலின் ராஜ்,13. மார்த்தாண்டம் சேக்கரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வகுப்பில், ஆங்கில ஆசிரியர் சுதீர், பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, கவனக்காமல் இருந்த ஆன்சிலின் ராஜாவை, மாணவிகள் அருகில் அமரும்படி, ஆசிரியர் கூறியுள்ளார். ஆன்சிலின் ராஜ் மறுக்கவே, அவரது கன்னத்தில் ஆசிரியர் சுதீர் "பளார்' என அறைந்துள்ளார். மேலும், கைகளிலும் அடித்துள்ளார். காயமடைந்த மாணவனை வீட்டுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. மாணவன் மதிய இடைவேளை நேரத்தில் தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளார். ஜெயக்குமார், மகனை அழைத்து சென்று குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சுதீர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிந்துள்ளனர். பாலியல் புகாருக்கு ஆசிரியர்கள் ஆளாகி வரும் நிலையில், மாணவிகள் அருகில் அமர மறுத்த மாணவனை, ஆசிரியர் அடித்து காயப்படுத்திய சம்பவம் கல்வியாளர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment