Thursday, 19 September 2013

குடிபோதையில் கணவனை தாக்கி விட்டு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேர் கைது



ஓடும் ரெயிலில் கணவனை தாக்கி விட்டு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது அருந்திய நிலையில் 2 பேர்
வேலூர் மாவட்டம் அரக்கோணம் பழனிபேட்டையை சேர்ந்த 25 வயது பெண் தன்னுடைய கணவருடன் நேற்று முன்தினம் ரெயிலில் திருவள்ளூருக்கு வந்தார். அவர்கள் இருவரும் வீரராகவபெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு அங்குள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.
இரவு 10 மணியளவில் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்வதற்காக சென்னையில் இருந்து வந்த அரக்கோணம் ரெயிலில் கணவன், மனைவி இருவரும் ஏறினார்கள். அந்த ரெயிலில் அவர்கள் ஏறிய பெட்டியில் 2 வாலிபர்கள் மது அருந்திய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
பலாத்காரம் செய்ய முயற்சி
ஓடும் ரெயிலில் அவர்கள் அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ய முயன்றனர். இதனால் பதறிப்போன அவர் கூச்சலிட்டார். அவருடைய கணவர் இதனை தட்டிக்கேட்டார். அதற்குள் ரெயில் ஏகாட்டூர் ரெயில் நிலையத்திற்கு வந்தது.
பிளாட்பாரத்தில் ரெயில் நின்றபோது அந்த 2 வாலிபர்களும் கணவரை சரமாரியாக தாக்கி விட்டு அந்த பெண்ணை ரெயிலில் இருந்து கீழே இழுத்துச் சென்று அருகில் உள்ள இருட்டான பகுதியில் வைத்து பலாத்காரம் செய்ய முயன்றனர்.
2 பேர் கைது
இதனால் அவர் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்ட ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்து அந்த வாலிபர்களிடம் இருந்து அந்த பெண்ணை மீட்டனர்.
போதையில் இருந்த இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்து கடம்பத்தூர் போலீசில் ஓப்படைத்தனர். இது குறித்து அந்த பெண் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் 2 பேரும் திருவள்ளூர் பெரியக்குப்பம் கற்குழாய் தெருவை சேர்ந்த லாரன்ஸ் (27), சாலமன் (28) என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment