பெங்களூரு: கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருப்பதாக கருதி, மூன்று வயது குழந்தையின் உடல் முழுவதும், சிகரெட்டால் சூடு வைத்த, தாயின் கள்ளக்காதலனும், தாயும் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம், கிருகாவலு கிராமத்தில் வசிப்பவர், ஹனுமந்த். இவருக்கும் கவிதா என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது.
தொடர்ந்து கொடுமை : கவிதா, ஏற்கனவே, புட்டசாமி என்பவரை மணந்து, ஆகாஷ், 5, ஹேமாவதி, 3, என்ற குழந்தைகள் உள்ளன. இதன்பின், கணவரை பிரித்து, குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்தார் கவிதா. அப்போது தான், ஹனுமந்துவுடன், அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. தங்களின் கள்ளத்தொடர்புக்கு, இரு குழந்தைகளும் இடையூறாக இருப்பதாக கருதி, இருவரையும் கொடுமைப்படுத்தி வந்தனர்.
உறவினர்களிடம் ஒப்படைப்பு : பின், ஆகாஷை, தன் மனைவி எல்லம்மாவிடமும், ஹேமாவதியை, மாண்டியாவில் குழந்தையில்லாத, தன் மைத்துனி சிக்க தாயம்மாவிடமும், ஒப்படைப்பது என, ஹனுமந்த் முடிவு செய்தார். அதன் படி, குழந்தைகளை ஒப்படைத்தார். மாண்டியாவில், மைத்துனி தாயம்மாவிடம் ஹேமாவதியை ஒப்படைக்கும் போது, குழந்தையின் உடல் முழுவதும் சிகரெட்டால் சுட்ட தீக்காயம் இருப்பதை பார்த்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
மிகவும் பலவீனம் : மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஊட்டச்சத்து குறைவாக பலவீனமாக இருப்ப தாகவும், தீக்காயம் ஆறுவதற்கு சிகிச்சை அளிப்பதாகவும் கூறினர். இது பற்றி, போலீசுக்கும், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
பின், குழந்தையை, மாண்டியா குழந்தைகள் நலத்துறை கமிட்டியிடம் ஒப்டைத்தனர். இது தொடர்பாக, ஹனுமந்த், கவிதா இருவரும் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment