Tuesday, 17 September 2013

ஆடை கட்டுபாடு திருப்ப பெற்ற கர்நாடக அரசு



பெங்களூரு:  மாநிலத்தில் அரசு ஊழியர்கள் ஆடை விசயத்தில் பின்பற்ற வேண்டி பிறப்பித்த உத்தரவை மாநில அரசு திரும்ப பெற்றது. கர்நாகாவில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு நடவடிவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதில் ஒன்று ஆடை விசயம். இதில் அரசு பணியில் ஈடுபட்டுள்ள ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் அணிந்து வரவேண்டிய ஆடை குறித்து உத்தரவு ஒன்ற‌ை கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் பிறப்பித்திரு்ந்தது. இதற்கு ஊழியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து நான்கு நாட்களுக்கு பின்னர் தலைமைசெயலகத்தில் இருந்து விடு்க்கப்பட்ட அறிக்கையில் அரசாங்கத்தின் மதிப்‌பை குறைக்காதவகையி்ல் நாகரீகமான முறையில் ஆடை அணிந்து வந்தால் போதுமானது என ‌தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment