Sunday, 8 September 2013

சிறுவர்களுடன் பாலியல் உறவு:போப் ஆண்டவரின் தூதர் பதவி நீக்கம்



சிறுவர்களுடன் தகாத உறவு வைத்திருந்த குற்றத்திற்காக வாடிகன் பிரதிநிதி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டோமினிக் குடியரசு நாட்டைச் சேர்ந்த வாடிகன் பிரதிநிதி மான்சிக்னார் ஜோசப் வெலோலெஸ்கி(வயது 65).
இவர் டோமினிக் குடியரசின் தலைநகரான சான்டோ டோமிங்கோவில் ஐந்து வருடங்களாக போப் ஆண்டவரின் தூதராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் சிறுவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களுடன் பாலியல் உறவு கொண்டதாகவும், தலைநகரின் வரலாற்று மையத்திலேயே இச்செயலில் ஈடுபட்டதாகவும் அந்நாட்டு பத்திரிக்கைகள் தகவல் வெளியிட்டன.
இதனை தொடர்ந்து ஜோசப் பதவி நீக்கம் செய்யப்பட்டார்

No comments:

Post a Comment