Saturday, 7 September 2013

அப்பான் செய்த தவறுக்கு மகனுக்கு தன்டனை அளித்த பஞ்சாயத்தார்



ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், 6 வயது சிறுமியை, 40 வயது நபர், பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் பெற்றோர், பலாத்காரம் செய்தவரின் மகனுக்கு, தங்கள் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என, பஞ்சாயத்தில் முறையிட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

6 வயது சிறுமி : ராஜஸ்தான் மாநிலத்தில், கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவு. இதனால், அங்கு, குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடப்பது வழக்கம். இளம் வயதிலேயே, திருமணம் செய்து விட்டு, சம்பந்தப்பட்ட சிறுமிகள், பூப்பெய்தியதும், மணமகன் வீட்டுக்கு, அவர்களை அனுப்பி வைப்பர்.
இந்நிலையில், இங்குள்ள கோடா மாவட்டத்தில், ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இங்கு வசிக்கும், 40 வயதுடைய ஒருவர், தன் பக்கத்து வீட்டில் வசிக்கும், 6 வயது சிறுமியை, இரண்டு முறை, பாலியல் பலாத்காரம் செய்தார். மூன்றாவது முறையாக, பலாத்காரம் செய்ய முயன்றபோது, ஊரில் இருந்தவர்கள், அவரை, கையும், களவுமாக பிடித்து, கிராம பஞ்சாயத்தார் முன்னிலையில் 
ஒப்படைத்தனர். சிறுமியின் பெற்றோர், "எங்கள் மகளின் வாழ்க்கை வீணாகி விட்டது. எங்கள் கவுரவமும், காற்றில் போய் விட்டது. பலாத்காரம் செய்தவருக்கு வயதாகி விட்டது. எனவே, அவருக்கு பதிலாக, அவரின், 10 வயது மகனை, எங்கள் மகளுக்கு திருமணம் முடிக்க வேண்டும்' என, முறையிட்டனர். பஞ்சாயத்தாரும், இவர்களின் கோரிக்கையை ஏற்றனர்.

மகன் வேண்டாம்; நானே... : ஆனால், பலாத்காரம் செய்த நபர், பஞ்சாயத்தார் கோரிக்கையை நிராகரித்து விட்டார். "வேண்டுமானால், அந்த சிறுமியை, நான் திருமணம் செய்து கொள்கிறேன். என் மகனுக்கு திருமணம் செய்ய முடியாது' என்றார். இதை ஏற்க மறுத்த பஞ்சாயத்தார், போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த நபர், கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம், ராஜஸ்தானில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment