ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் டேவிட் (65) ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர்.
இவருக்கு 6 மகன்கள் உள்ளனர். இதில் 2–வது மகன் அந்தோணி வேலை எதுவும் பார்க்கவில்லை. தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்தார். அதோடு சொத்தில் தனக்குரிய பங்கை பிரித்து தரும்படி சண்டையிட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று சொத்து காரணமாக தந்தை–மகன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அந்தோணி கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை தந்தை டேவிட் வாயில் ஊற்றினார். வாய் வெந்த நிலையில் டேவிட் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
No comments:
Post a Comment