பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளிச் செட்டிபாளையத்தில் வசிப்பவர் மணிகண்டன், 25. தேங்காய் உரிக்கும் தொழிலுக்கு சென்று வருகிறார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பாக்யா, 22, என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. எட்டு மாத ஆண்குழந்தையும் உள்ளது. குடி போதைக்கு அடிமையான மணிகண்டன், அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம்.இதேபோல், நேற்றுமுன்தினம் மாலை இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போதையில் மிதந்த மணிகண்டன், பாக்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இத்தகவல் தெரிந்ததும் வடக்கிபாளையம் போலீசார் பாக்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், அப்பகுதியில் சுற்றித்திரிந்த மணிகண்டனை கைது செய்தனர்.
போலீசாரிடம் மணிகண்டன் அளித்த வாக்குமூலம்:நான் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்தே செலவு செய்தேன். மேலும், குடிப்பதற்காக பணமும் கேட்டதால் எங்களிடையே தகராறு ஏற்படும். சம்பவத்தன்று குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால், எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.போதையிலிருந்த நான் ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை நெரித்ததில் மயங்கி விழுந்தாள். போதை தெளிந்து எழுந்து பார்த்த போது, அவளை எழுப்பியும் அசையாமல் படுத்ததை கண்டு இறந்து விட்டதைக்கண்டு அதிர்ச்சியடைந்தேன்.இவ்வாறு மணிகண்டன் கூறினார்.
No comments:
Post a Comment