இத்தாலியில் இருக்கும் வெனிஸ் நகரம் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட அளவு மூழ்கிவருவதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பாவின் மிதக்கும் நகரமான வெனிஸ் மனித செயல்பாடுகளால் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட அளவு மூழ்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன செயற்கைக்கோள்களின் உதவியுடன் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், இயற்கையாக இந்நகரம் ஆண்டுதோறும் 0.8 லிருந்து 1 மி.மீ வரை மூழ்கும் நிலையில், மனித நடவடிக்கைகளால் இந்த நகரம் ஆண்டுதோறும் 0.8 லிருந்து 10 மி.மீ வரை மூழ்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளதுஇந்த நிலையில், ஏற்கெனவே ஆண்டிற்கு நான்கு முறை அதிகரித்துவரும் நீர்மட்டத்தால் நகருக்கு ஏற்படும் ஆபத்து குறித்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
முன்னதாக வெனிஸ் நகரின் நிலத்தடி நீர் வெளியேற்றப்படும்போது நகரம் கீழிறங்குவது கண்டுப்பிடிக்கப்பட்டது, இத்தகைய நடைமுறைகளை முற்றிலுமாக நிறுத்திய பின்னரும் நகரம் தொடர்ந்து மூழ்கிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment