Thursday, 12 September 2013

48 பேர் பலியானதற்கு மதவாத சக்திகளே காரணம்: அகிலேஷ் யாதவ்

சமூக மோதலில் 48 பேர் பலியானதற்கு மதவாத சக்திகளே காரணம்: அகிலேஷ் யாதவ்
உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக இரு சமூகங்களிடையே (ஜாட்&முஸ்லிம்) நடந்த மோதலில் இதுவரை 48 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் முசாபர்நகரில் மட்டும் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று இரவு மற்ற மாவட்டங்களில் நடந்த மோதலில் 6 பேர் பலியாயினர். 

மேலும் இறந்துபோனரின் உடல்கள அடையாளம் காணமுடியாதபடி இருப்பதால், இன்னும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. 
இச்சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஆளும் சமாஜ்வாடி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் அவசரமாக இன்று ஆக்ராவில் கூடுகிறது. 

முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் பதவி விலக வேண்டுமென 6 முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கைவிடுத்துள்ளன.  முஸ்லிம்கள் பெரும்பான்மையாக ஆதரிக்கும் சமாஜ்வாடி கட்சிக்கு இதனால் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த இரு சமூக மோதல்களுக்கு மதவாதிகளே காரணம் என்று முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment