பெங்களூரு: விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, பாட்டுக்கு நடனமாடும் விஷயத்தில், நண்பர்களிடையே ஏற்பட்ட மோதல், இரட்டை கொலையில் முடிந்தது. பெங்களூரு, லிங்கராஜபுரத்தைச் சேசர்ந்தவர், சின்ன தம்பி மகன் கார்த்திக், 19, ரவி மகன் கேசசவா, 18. இவர்கள், பெங்களூரு ஜானகிராம் லே அவுட்டில், விநாயகர் சசதுர்த்தி விழாவில் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த விநாயகரை, ஹலசூரு ஏரியில் கரைப்பதற்காக, ஊர்வலமாக எடுத்து செசன்றனர். வாகனத்தின், முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஸ்பீக்கரில், பாட்டு ஒலிபரப்பப்பட்டது. இந்த பாட்டுக்கு தகுந்தாற்போல், வாலிபர்கள் நடனமாடி வந்தனர். நள்ளிரவு, 11.30 மணியளவில், செசயின்ட் ஜான்ஸ் பள்ளி முன் பகுதியில், ஊர்வலம் செசன்று கொண்டிருந்தது. பாட்டுக்கு தகுந்தாற் போல், நடனமாடும் விஷயத்தில், கார்த்திக், கேசசவா தரப்பினருக்கும், பீமராஜ் தலைமையிலான, எட்டு பேர் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் தீவிரமடைந்ததில், ஆத்திரமடைந்த ஏழு பேரும், கத்தியால் கேசசவாவின் கழுத்தில் குத்தினர். இடையில் நுழைந்த கார்த்திக் முதுகிலும் கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த இருவரும், சிவாஜி பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைச பலனின்றி, நள்ளிரவில் இருவரும் உயிரிழந்தனர்.
இவர்களை கொலை செசய்த, ஜானகிராம் லே அவுட் பீமராஜ் உட்பட, எட்டு பேரும் கைது செசய்யப்பட்டனர்
No comments:
Post a Comment