Wednesday, 18 September 2013

குடிபோதையில் காதலனுக்கு கத்திக்குத்து: காதலி கைது



நியூயார்க்: குடிபோதையில் ஆண் நண்பரை கத்தியால் பலமுறை குத்திய காதலியை, போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின், தெற்கு கரோலினாவை சேர்ந்தவர், வெர்னட் பாடர், 54. சம்பவத்தன்று, இவரது ஆண் நண்பருடன், இங்குள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். அவரது ஆண் நண்பர், "டிவி'யில் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, "டிவி'யை அணைத்துவிடும்படி, பாடர் கூறினார். ஆனால், இதை பொருட்படுத்தாமல், அவரது நண்பர், இசையை ரசித்துக் கொண்டிருந்தார். இதில், ஆத்திரமடைந்த பாடர், கத்தியால், அவரது ஆண் நண்பரை, பல இடங்களில், சரமாரியாக குத்தினார். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் நடந்தபோது, பாடர், அளவுக்கு அதிகமாக குடித்திருந்தார். இந்த பெண்ணை கைது செய்த போலீசார், குடும்ப சண்டை தொடர்பான வழக்கு பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment