Tuesday, 17 September 2013

சிவசேனா நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு- v.h.pஅமைப்பை சேர்ந்தவர்கள் கைது



விநாயகர் சிலை வைத்ததில் ஏற்பட்ட முன்விரோதத்தில் சிவசேனா நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக விசுவ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவசேனா நிர்வாகி
கோவை பாப்பநாயக்கன்பாளையம் சிறுகாளி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 35). இவர் சிவசேனா கட்சியின் கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவருடைய சகோதரர் வினோத்குமார் (32), சிவசேனாவில் நிர்வாகியாக உள்ளார். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் இரவில் முத்துக்குமார் தனது மனைவி தீபா, மகள் தனுஷ்மா, தாயார் வேலுமணி ஆகியோருடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். வினோத்குமார் வெளியில் சென்றிருந்தார்.
பெட்ரோல் குண்டு வீச்சு
நள்ளிரவு 2½ மணிக்கு ஒரு கும்பல் முத்துக்குமார் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியது. வீட்டின் மேல்பகுதியில் உள்ள சிமெண்ட் ஷீட் மீது விழுந்த பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு முத்துக்குமார் வெளியே ஓடி வந்தார். அவரை பார்த்ததும் அங்கு நின்று கொண்டு இருந்த கும்பல் தப்பி ஓடியது.
போலீஸ் விசாரணை
இது குறித்து முத்துக்குமார் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை சோதனை செய்து, அங்கு சிதறி கிடந்த கண்ணாடி துண்டுகளை சேகரித்தனர். பின்பு அங்கு இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விசுவ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் முத்துக்குமார் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்தது.
8 பேர் கைது
விசுவ இந்து பரிஷத் மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுபாஷ் (38) மற்றும் நிர்வாகிகள் குண்டு மணி என்கிற மணிகண்டன் (26), ராமகிருஷ்ணன் (22), அனிஷ்குமார் (29), முருகேசன் (32), சுரேஷ் கிருஷ்ணன் (22), கார்த்திக் (25), ராஜ்குமார் (26) மற்றும் விக்னேஷ் (29) ஆகிய 9 பேர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.
அதன்பேரில் அவர்கள் மீது கூட்டுசதி, வெடிபொருட்களை பயன்படுத்துதல் உள்பட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அதில், முருகேசனை தவிர 8 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவை மாஜிஸ்திரேட்டு 3-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முருகேசனை தீவிரமாக தேடி வருகிறார்க

No comments:

Post a Comment