Sunday, 22 September 2013

ஆறாம் வகுப்பு அறிவியல் பாடம் படித்தால் செக்ஸ் ஆசை:



பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்த தடை விதித்துள்ளது.
இந்த புத்தகத்தைப் படிப்பதால் மாணவர்களின் செக்ஸ் ஆசை தூண்டப்படும் என்பதால் இந்த தடை உத்தரவு என்று அது கூறியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் லூகாரைச் சேர்ந்த கிராமர் பள்ளி என்ற தனியார் பள்ளியில் அறிவியல் பாடம் நடத்துவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.
பெற்றோர்களிடமிருந்து புகார் வந்ததால் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல பல்வேறு தனியார் பள்ளிகளிலும் அறிவியல் பாடம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.
இது குறித்து மாகாண கல்வி அமைச்சர் ராணா மசூச் அகமது கூறுகையில், பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்ததால் தடை விதித்துள்ளோம்.
செக்ஸ் ஆசையைத் தூண்டும் வகையில் இந்தப் பள்ளிகளின் அறிவியல் பாடம் உள்ளதால் தடை விதிக்கப்படுகிறது என்றும் இதை ஏற்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த அறிவியல் பாடம் தொடர்பாக விசாரணைக்கும் இந்த மாகாண அரசு உத்தரவிட்டுள்ளதா

No comments:

Post a Comment