ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பெண்ணிடம் மொபைல் போனில் தொடர்ந்து காதலிப்பதாக கூறி, இளம் பெண்ணை கற்பழித்தவரை போலீசார் கைது செய்தனர். ராமேஸ்வரம் ஏரகாடு பகுதியை சேர்ந்த, 23 வயது பெண்ணின் மொபைல் போனுக்கு, மதுரையில் இருந்து லாரன்ஸ் என்பவர் பேசுவதாக ஆரம்பித்தார். தொடர்ந்து போனில் பேசி, இவர் விரித்த காதல் வலையில் பெண்ணும் வீழ்ந்தார். செப்.,7ம் தேதி பெண்ணை தனியாக வரசொல்லி, டூவீலரில் ராமேஸ்வரம் சவுக்கு காட்டிற்கு அழைத்து சென்றார். திருமணம் செய்வதாக ஆசை கூறி
கற்பழித்தார். சேலை வாங்கி வருவதாக கூறி தலைமறைவானார். பெண்ணின் புகார்படி, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, வழக்கு பதிந்து விசாரித்தார். தலைமறைவானவரின் மொபைல்
போன் எண்ணை வைத்து விசாரித்த போது, தொண்டி அருகே விளக்கனேந்தல் செந்தில்கனி மாதவன், 27, என
தெரியவந்தது. ராமேஸ்வரம் அக்காள்மடம் பஸ் ஸ்டாப்பில் நேற்று நின்றிருந்த இவரை, போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment