வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ஈட்டியார் எஸ்டேட்டை சேர்ந்த சின்னகண்ணு மகள் சங்கீதா(18). வால்பாறை அரசு கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பிய அவர் திடீரென உடலில் கெரசின் ஊற்றி தீக்குளித்தார். கோவை அரசு மருத்துவமனையில் நேற்று காலை அவர் இறந்தார். முன்னதாக, அவர் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதில், கடந்த 5ம்தேதி கல்லூரியில் ஆசிரியர் தின விழா நடந்தது. மாணவ, மாணவிகள் கேக் வெட்டினர். அப்போது கேக் கிரீமை ஒருவருக்கொருவர் முகத்தில் தடவி விளையாடினர். சங்கீதா முகத்திலும் ஒரு மாணவர் கிரீம் தடவியுள்ளார். நேற்று முன்தினம் வகுப்பு நடந்தபோது, இந்த சம்பவத்தை கூறி மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியாக ஆசிரியர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். ஒரு பேராசிரியர், சங்கீதாவையும், அவரது முகத்தில் கிரீம் தடவிய மாணவனையும் இணைத்து தகாத முறையில் பேசியுள்ளார். இதனால் வேதனை அடைந்து உடலில் தீ வைத்ததாக சங்கீதா வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து வால்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Saturday, 7 September 2013
மாணவனுடன் இணைத்து பேராசிரியர் பேசியதால் மாணவி சாவு

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment