Saturday, 7 September 2013

போதையில் வீட்டை பூட்டிச் சென்றார் தாய் பட்டினியால் குழந்தைகள் சாவு



பீஜிங் : கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் புறநகர் பகுதியை சேர்ந்த பெண் லீ யான் (22). போதை பழக்கத்துக்கு அடிமையானவர். 3 மாத கர்ப்பிணி. இவரது கணவர் போதை பொருள் வழக்கில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 1 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 16 வயதிலேயே போதைக்கு அடிமையான லீ யான், குழந்தைகளை சரிவர கவனிப்பதில்லை. கடந்த ஏப்ரல் மாதம் குழந்தைகளை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். 

இதனால் வீட்டுக்குள் இருந்த குழந்தைகள் உணவு, தண்ணீர் இல்லாமல் சுருண்டு இறந்து விட்டனர். அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தைகள் பட்டினியால் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லீ யானை கைது செய்தனர். 

No comments:

Post a Comment